You are currently viewing UPS Unified Pension Scheme: A New Dawn for Government Pensions in Tamil
UPS Pension

UPS Unified Pension Scheme: A New Dawn for Government Pensions in Tamil

ஜார்கண்டு மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன்னர் ஒரு பெரிய அறிவிப்பான புதிய ஓய்வூதிய திட்டத்தை பாஜக அரசாங்கம் அறிவிச்சிருக்காங்க. பாஜக அல்லாத மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாஜக அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) Unified Pension Scheme (UPS) தொடங்கிருக்காங்க.

23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பலன்

இந்தத் திட்டம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு (தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்) பயனளிக்கும்” என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை ஏற்க முடிவு செய்தால், இந்த எண்ணிக்கை 900,000 ஆக உயரும், மேலும் பலன்களை நீட்டிக்க முடியும்.

புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும் மேலும் NPS (National Pension Scheme) அல்லது UPS (Unified Pension Scheme) திட்டத்தில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட யுபிஎஸ் திட்டம், அரசு ஊழியர்களுக்கு உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் திட்டம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஊழியர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் திட்டம்

இந்தத் திட்டம் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்தை வழங்க உறுதி செய்கிறது.

இந்த விகிதாசாரம் குறைந்தபட்சம் 10 வருட சேவை வரை குறுகிய சேவை காலத்திற்கு பொருந்தும்.

உறுதிசெய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம்

ஓய்வூதியதாரர் மரணம் அடைந்தால் கடைசியாக அவர் பெற்ற ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதத்தை அவாின் குடும்பத்தார் பெற்றுக்கொள்வார்கள்.

உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் திட்டம்

இந்த திட்டம் குறைந்தபட்சம் 10 வருடம் பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதம் ₹ 10,000 உத்தரவாதம் அளிக்கிறது.

தற்போதைய ஓய்வூதிய திட்டம்

தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஊழியர்கள் 10 சதவீத பங்களிப்பையும், மத்திய அரசு 14 சதவீத பங்களிப்பின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது, இது UPS (Unified Pension Scheme) இல் அரசாங்கத்தின் பங்களிப்பு 18.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்

அரசு ஊழியர்களுக்கான நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான எங்கள் அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு கண்ணியம் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்கிறது, ”என்று ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

மதிப்பாய்வு செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டம்

கடந்த ஆண்டு, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், தேசிய ஓய்வூதிய அமைப்பின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பின் மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் நிதிச் செயலர் டி.வி.சோமநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

First State in India introduce Unified pension Scheme
Maharastra First State to Offer Unified Pension Scheme

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS-Unified Pension Scheme) வழங்கும் முதல் மாநிலம் எது?

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு தனது ஊழியர்களுக்கு புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS-Unified Pension Scheme) வழங்கும் நாட்டிலேயே முதல் மாநிலமாகும். ஜனவரி 1, 2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான UPS(Unified Pension Scheme) ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மார்ச் முதல் UPS (Unified Pension Scheme) ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என்றும் அனைத்து மாநில அரசு ஊழியர்களும் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும் இது சார்ந்த முடிவை மகாராஷ்டிர அமைச்சரவை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தனது ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS-Unified Pension Scheme) வழங்கும் முதல் மாநிலமாகும்.

UPS ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?

UPS (Unified Pension Scheme) ஓய்வூதியம் என்பது மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமாகும்.
இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும்.
UPS(Unified Pension Scheme) ஓய்வூதிய திட்டம் ஊழியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்தை வழங்கும் திட்டமாகும்.
25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு, ஓய்வு பெறுவதற்கு முந்தைய ஆண்டில் ஊழியர் பெற்ற அடிப்படை ஊதியத்தின் சராசரியில் பாதியை ஓய்வுதியமாக வழங்கும் திட்டமே யுபிஎஸ் ஓய்வூதிய திட்டம் ஆகும்.
குறைந்த ஆண்டுகள் பணி செய்யும் ஊழியர்களுக்கு இந்தத் தொகை குறைவாக இருக்கும்.குறைந்தபட்ச பணி செய்யும் ஆண்டு 10 ஆண்டுகளாகும்.
10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 10,000 ரூபாய் ஓய்வுதியமாக கிடைக்கும்.
ஒருவேளை ஊழியர் இறந்து விட்டால், அவரது ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை அவரின் இறப்புக்கு பின்னர் அவர்களது குடும்பம் பெறலாம்.
UPS (Unified Pension Scheme) பணவீக்கக் குறியீட்டையும் வழங்குகிறது – இது தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
UPS (Unified Pension Scheme) ஆனது ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வுபெறும் போது மொத்த தொகையையும் வழங்குகிறது.
UPS (Unified Pension Scheme) இன் கீழ், 10 சதவிகிதம் பங்களிப்பு பணியாளர் அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் ஊழியர் பணியில் இருக்கும் காலத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது , அதே நேரத்தில் அரசாங்கம் 18.5 சதவிகிதம் பங்களிப்பை கொடுத்து ஓய்வுக்கு பின்னர் ஊழியருக்கு ஓய்வுதியமாக வழங்குகின்றது.
0

NPS (National Pension Scheme) ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?

NPS (National Pension Scheme) ஓய்வூதிய திட்டம் என்பது 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 1, 2004 அன்று அப்போதைய அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஆகும்.
NPS (National Pension Scheme) ஓய்வூதிய திட்டம் என்பது Old Pension Scheme (OPS) பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.
மத்திய அரசாங்கமும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமும் Pension Fund Regulatory and Development Authority (PFRDA) இணைந்து இந்த திட்டத்தை நிர்வகிக்கின்றது.
OPS (Old Pension Scheme) ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக NPS (National Pension Scheme) ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது – இது UPS (Unified Pension Scheme) ஓய்வூதிய திட்டத்தை போலவே செயல்படும் ஒரு ஓய்வூதிய திட்டமாகும்.
ஓபிஎஸ் ஓய்வூதிய திட்டம் , என்பிஎஸ் ஓய்வூதிய திட்டம் போன்றே, ஊழியர்களுக்கு ஓய்வு பெறும்போது ரூ. 20 லட்சம் வரை மொத்த தொகையை வழங்குகின்றது.

புதிய ஓய்வூதியத் திட்டம் UPS (Unified Pension Scheme) தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS-National Pension Scheme) எவ்வாறு வேறுபடுகிறது?

NPS ஓய்வூதிய திட்டமும் UPS (Unified Pension Scheme) ஓய்வூதிய திட்டம் போன்றே ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினாலும் இது UPS (Unified Pension Scheme) ஓய்வூதிய திட்டத்திலிருந்து வேறுபட்டே காணப்படுகின்றது.
முதல் வேறுபாடு NPS ஓய்வூதிய திட்டம் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
NPS (National Pension Scheme) இன் கீழ் உள்ள ஊழியர் அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் பங்களிப்பை தருவதன் மூலமும் ,அரசாங்கத்தின் 14 சதவிகிதம் பங்களிப்பை அடிப்படையாக கொண்டு ஓய்வுதியம் கொடுக்கப்பட்டாலும்.
ஊழியர் ஓய்வு பெறும்போது பெறும் தொகை, பங்குச் சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே கொடுக்கப்படுகின்றது.
NPS (National Pension Scheme) இன் கீழ் உள்ள ஊழியர்கள் தாங்கள் பெறும் corpus தொகையில் ஒரு பகுதியை மட்டுமே பெற முடியும், மீதமுள்ளவை மாதாந்திர தவணைகளில் அவர்களுக்கு செலுத்தப்படும்.
NPS ஆனது இரண்டு வகையான கணக்குகளை கொண்டுள்ளது – Tier 1 and Tier 2.
Tier 1 இல் இருக்கும் ஊழியர்கள் தங்களின் corpus தொகையை, அவர்கள் ஓய்வு பெற்ற பிறகே பெற முடியும்.
Tier 2 இல் இருக்கும் ஊழியர்கள் தங்களின் corpus தொகையை ஓய்வு பெறும் முன்னரே அதை அணுக முடியும்.
வருமான வரிச் சட்டத்தின் 80 CCDயின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகைகளையும் NPS பெறலாம்.பிரிவு 80 CCD(1B) இன் கீழ் 1.5 லட்சத்திற்கு மேல், மேலும் ரூ. 50,000 வரை வரிச் சலுகைகள் பெறலாம்.
NPS ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெறும் போது கார்பஸில் அறுபது சதவிகிதத்தை வரியின்றி பெற்றுக்கொள்ளலாம்.
NPS ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் UPS (Unified Pension Scheme) ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
UPS (Unified Pension Scheme) மற்றும் OPS (Old Pension Scheme) போலன்றி, யார் வேண்டுமானாலும் NPS ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துக்கொள்ளலாம்.18 முதல் 70 வயது வரை உள்ள இந்திய குடிமகன் எவரும் NPS ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம்.

பிஜேபி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) இந்தியாவின் ஓய்வூதிய கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி மில்லியன் கணக்கான அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் என நம்பபடுகின்றது.

ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பு வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்.

மேம்படுத்தப்பட்ட நிதிப் பாதுகாப்பையும் மற்றும் நன்மைகளையும் புதிய UPS ஓய்வூதிய திட்டம் உறுதியளிக்குமா, குறிப்பாக தற்போதுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் (NPS) ஒப்பிடுகையில், மாநில அரசுகளால் புதிய UPS ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.